சத்தியம் மக்கள் சேவை மையம்

Sunday, February 15, 2009

காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏!

காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏!






ஈழத்தமிழர்களை தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவி வரும் தமிழின துரோக காங்கிரசைக் கண்டித்து புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் நேற்று(15-02-2009) நடந்தது.ஈழத்தில் சிங்கள அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போரை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டியும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கிய ஆள், ஆயத, பண உதவிகளை திரும்பப் பெற வேண்டுமென்றும்,

 தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகளை முதன்மைப் படுத்தி புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் புதுச்சேரி சாரம் பகுதியில் உண்ணாப்போராட்டம் நடந்தது.


 
இப்போராட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்" இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்கினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் அவைத்தலைவர் தே.சரவணன் உண்ணாப்போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் தலைவர் தே.சத்தியமூர்த்தி, பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மையத்தின் துணைச் செயலாளர் க.ஆனந்த் 'இந்திய அரசின் தமிழினத் துரோகம்' என்ற தலைப்பில் கண்டன உரையாற்றினார்.


 
ராஜபட்சேவின் அரக்கத்தனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது படத்தின் முன் செருப்புகளை விட்டு "மரியாதை" செய்யப்பட்டது. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து மாண்ட தூத்துக்குடி இளைஞர் முத்துக்குமாரின் மரண சாசனத்தை சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் படித்தார். ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


 
இப்போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணி இரா.சுகுமாரன், புதுச்சேரி மாநில மிதிவண்டி வியாபாரிகள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் டாக்டர். மகான், விடுதலைச் சிறுத்தைகள் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.பாவாணன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.இளையபெருமாள், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் முத்து, புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் புதுவை தமிழ்நெஞ்சன், பெரியார் திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சார்லஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.


 
உண்ணாப்போராட்டத்தின் இறுதியில் காங்கிரசின் துரோகத்தனங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டு அதன் அரசியல் ஏட்டின் ஆசிரியர் குழு உறுப்பினது க.அருணபாரதி பேசினார். மேலும் அந்த ஆவணங்களை பரவலாக்குவதன் மூலம் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.



உண்ணாப்போராட்டத்தை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம் முடித்து வைத்துப் பேசினார்.

வெளியிடப்பட்ட ஆவணங்கள்:








நன்றி  www.tamilseythi.com தமிழ்ச் செய்தி இணையதளம்

-----------------------------------------------------------
தோழமையுடன்
      க.அருணபாரதி
  www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:12 PM 0 comments

Friday, February 13, 2009

Fwd: இந்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் 15-02-09 அன்று உண்ணாப்போராட்டம்

சிங்கள இனவெறி அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து
புதுச்சேரியில் சத்தியம் மக்கள் சேவை மையத்தினர் உண்ணாப்போராட்டம்

    ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் நோக்கோடு சிங்கள இனவெறி அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போருக்கு இந்திய அரசு உதவுவது படுபாதகச் செயலாகும்.

    இந்திய அரசின் இப்போக்கைக் கண்டிக்கும் வகையிலும், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போரை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தியும், தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும் கோரிக்கை விடுத்து வரகிற 15-2-09 அன்று புதுச்சேரி சாரம் பகுதியல் கண்டன உண்ணாப் போராட்டம் நடைபெறவுள்ளது.

    இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்குகிறார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனத் தலைவர் தே.சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். அவைத் தலைவர் தே.சரவணன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசுகிறார்.

    சத்தியம் மக்கள் சேவை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம், துணைச் செயலாளர் க.ஆனந்த், பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்ட இயக்க நிர்வாகிகளும், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக நல இயக்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

    காங்கிரஸ் அரசாளும் புதுச்சேரி மாநிலத்தில் நடக்கவிருக்கும் இவ்வுண்ணாப் போராட்டத்தில், இந்திய அரசிற்கு எதிரான நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக தமிழின உணர்வாளர்கள் பெரும் திரளாக இப்போராட்டத்தில் பங்கு பெற்று வேண்டுமென உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
தே.சத்தியமூர்த்தி,
நிறுவனத் தலைவர்
சத்தியம் மக்கள் சேவை மையம்

தொடர்புக்கு : 9362141055, 9841949462
இணையம்  :
http://sathiyapuratchi.blogspot.com
மின்னஞ்சல்  : anand.k.mail@gmail.com

நாள்  : 12-02-2009,
இடம் : புதுச்சேரி

 
கண்டன உண்ணாவிரதம்
 
இந்திய அரசு!
ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் சிங்கள இனவெறி அரசின் போரை உடனே  தடுத்து நிறுத்து!

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு வழங்கிய ஆள், ஆயுத, பண உதவிகளை திரும்பப் பெறு!
 
தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரி!
 
நாள்   : 15-02-09
இடம்   : சாரம் ஜீவானந்தம் சிலை அருகில், புதுச்சேரி.
 
  ----------------------------------------------------  தலைமை   ----------------------------------------------------
தோழர் க.அருணபாரதி,
ஆசிரியர் குழு,
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழ்.
 
  ---------------------------------------------------- முன்னிலை  ----------------------------------------------------
தோழர் தே.சத்தியமூர்த்தி,
நிறுவனத் தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்.

  ----------------------------------------------------  தொடங்கி வைத்தல்    ----------------------------------------------------
தோழர் தே.சரவணன்,
அவைத்தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்.
 
  ---------------------------------------------------- கண்டன உரை    ----------------------------------------------------
 
தோழர் சசிகலா ஆறுமுகம்
செயலாளர், 
சத்தியம் மக்கள் சேவை மையம்.
 
தோழர் க.ஆனந்த்
துணைச் செயலாளர், 
சத்தியம் மக்கள் சேவை மையம்.
 
தோழர் தே.சந்தோஷ்
பொருளாளர், 
சத்தியம் மக்கள் சேவை மையம்.
 
தோழர் ம.சீனிவாசன்
துணைத் தலைவர், 
சத்தியம் மக்கள் சேவை மையம்.
 
  ---------------------------------------------------- மற்றும்   ----------------------------------------------------
பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள்,
சமூக நல அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்கள்,
அரசியல் கட்சித் தலைவர்கள்

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 8:57 PM 1 comments