சத்தியம் மக்கள் சேவை மையம்
Monday, November 12, 2007
வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது
வைகோ, பழ.நெடுமாறன், மணியரசன் உள்ளிட்ட 346 பேர் கைது |
|
![]() |
சென்னை மன்றோ சிலை அருகே இன்று திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனையடுத்து
அப்போது ம.தி.மு.க. நிர்வாகி வேளச்சேரி மணிமாறனை காவல்துறை தாக்கியதாக வைகோ குற்றம்சாட்டி முழக்கமிட்டார்.
அதன் பின்னர் வைகோ, பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் மணியரசன், ஓவியர் வீரசந்தானம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மற்றும் அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் மாலை 5:20 மணியளவில் கைது செய்தனர். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, கவிஞர் இன்குலாப் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 14 பெண்கள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 346 பேரும் இன்று இரவு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். |

1 Comments:
Variety Bathtub Taps everywhere, each one is addictive, and often people do not know how to choose. Which is a good Taps UK? But we can start with the material from the bathtub, Pull Out Kitchen Taps different materials are very different
Post a Comment
<< Home