சத்தியம் மக்கள் சேவை மையம்

Friday, March 9, 2007

சட்டம் மற்றும் மனித உரிமை மீறல்கள்

சட்டம் மற்றும் மனித உரிமை மீறல்கள்

 நமக்காக நாமே வகுத்தது தான் சட்டம். ஆனால் அச்சட்டம் இன்று எல்லோருக்ம் சமமாக இருக்கின்றதா? என்றால் இல்லை. ஏழைக்கு ஒரு விதமாகவும் பணக்காரர்களுக்கு ஒரு விதமாகவும் செயல்படும் நிலைமை வலுக்கிறது. இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் பலாம் அவர்களுக்கே பிடிவாரண்ட் வாங்க சில நூறு ருபாய்கள் தான் செலவாகும் என ஒரு பத்திரிக்கை நிருபித்தார். சட்டம் அதை படைத்தவர்களிடமே இருக்கிறது. சுhதாரண மக்களை அது சென்றடைவதில்லை. அதனை செயல்படுத்தி மக்களுக்கான சட்டம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதை நிலைநிறுத்த பிரச்சாரங்கள்  செய்வோம்.
 மனித உரிமை மீறல் என்பது நடைமுறை வாழ்வில் சகஜம் என்றானது போல் ஆங்காங்கே நடைபெறுவது மிகவும் கண்டனத்திற்குரியது. பள்ளிச் சிறுவனை அடிப்பதும், மனைவியை துன்புறுத்துவதும் மனித உரிமை மீறலே ஆகும். அவ்வாறு நடக்கும் கொடுமைகளை எதிர்த்து போராட அணி திரள வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது. ஏனெனில் மனித நேயம் மட்டுமே நமது மையத்தின் அடி நாதம்.
மரண தண்டனை என்பது மனிதனை தண்டிக்க செயல்படுத்துவது மட்டுமல்ல அவனை அத்தோடு அழிக்க செயல்படுத்தும் மிகக் கொடூரமான செயல். இந்திய அரசமைப்பு சட்டவதியில் உள்ள வாழ்வதற்கான உரிமையை அதே அரசு மரண தண்டனையின் மூலம் பறிக்கிறது. தன்னை சட்டத்தை தானே உடைப்பதற்கு மரண தண்டனை ஒர் உதாரணம்.
இந்திய தண்டனை சட்டத்தின் 194ஐ பிரிவு: பொய் சாட்சி காரணமாக மரணதண்டனை நிறைவேற்றபட்டு ஒருவர் இறக்கநேரிட்டு, பின்னர் அது பொய் சாட்சி என கண்டறிய பட்டால், அந்த பொய் சாட்சியை கூறியவருக்கும் மரண தண்டனை விதிக்கலாம். பொய் சாட்சியின் வழியாக ஒரு நிரபராதி தண்டிக்கப்படலாம் என சட்டமே தன் குறையை ஒத்துக் கொள்கிறது. இதற்கு மாறாக ஆயுள் தண்டனை கொடுத்திருந்தால் பின்னர் அந்த பொய்சாட்சி நிரூபிக்கப்பட்டவுடன் விடுதலை கிடைத்து நிரபராதி பிழைத்துக் கொண்டிருப்பார். இவ்வாறு மீள முடியாத இந்த மரணதண்டனையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சுpல கோடிகள் மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டில் சுமார் 1400 பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருந்தார்கள். பின்னர் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதும் அவர்களுக்கு அத்தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் சுமார் நூற்று ஐந்து கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் சுமார் 1200 பேர் தான் மரண தண்டனைக் கைதிகளாக சாவை நோக்கி பயணித்தபடி இருக்கிறார்கள். குற்றங்கள் அதிகமான நாடுகளிலேயே மரணதண்டனை ஒழிக்கப்படுகையில் மரணதண்டனைக் குற்றங்கள் குறைவான நம் நாட்டில் அவற்றை ஏன் ஒழிக்கக்கூடாது ? அஹிம்சையால் சுதந்திரம் பெற்றதாய் சொல்லும் இந்திய துணைக் கண்டத்திற்கு ஹிம்சையின் கோர வடிவமான மரணதண்டனை தேவை தானா ?
தமிழர்கள் மனித நேயத்திற்கு பேர் போனவர்கள். எறும்புக்கு கூட கோலத்தின் வழியாக உணவூட்டி அதன் பசியாறுவதை கண்டு ரசித்த தமிழினம் நம்மினம். ஆப்படிப்ட்ட நம் தமிழ் இனம் மரணதண்டனையை முற்றாக ஒழிக்கக் குரல் கொடுக்கும். சத்தியம் மக்கள் சேவை மையம் அதற்கு என்றும் துணை நிற்கும்
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:13 PM

0 Comments:

Post a Comment

<< Home