சத்தியம் மக்கள் சேவை மையம்

Friday, March 9, 2007

பொதுவுடைமைக் கொள்கை ஏற்பு

பொதுவுடைமைக் கொள்கை ஏற்பு

ஜெர்மன் தத்துவ அறிஞரும் இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளராக உலகமே அடையாளங்காட்டும் காரல் மார்க்ஸ் அவர்கள் வகுத்த பொதுவுடைமைக் கொள்கை புதிய உலகை படைக்கும் சக்தி கொண்டது. எண்ணற்ற உழைக்கும் மக்களை, விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகள் தம் முன்னோர் சொத்து என்ற பெயராலும் மூலதனம் என்ற பெயராலும் தொழில் நடத்தி மக்களின் உழைப்பை சுரண்டி தான் மட்டும் சுகமாக வாழ்வதை எதிர்த்த மார்க்ஸ், படைத்த ஒப்பற்ற தத்துவமே மார்க்சியம். முதலாளித்துவத்திற்கு தீர்வாக நிகரமை(சோஷலிசம்) மற்றும் பொதுவுடைமை தத்துவம்(கம்யுனிசம்) ஆகியவற்றை முன்னிறுத்தினார். அளவுக்கு மீறிய தேவைக்கு அதிகமான சொத்துக்களைக் கொண்ட பணக்காரர்களிடமிருந்து அதனை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி அதனை ஏழைகளுக்கு சம அளவல் பங்கிட்டு வழங்கும் பாட்டாளிகள் அங்கம் வகக்கும் அரசை நிறுவுவதின் மூலம் இதனை செயல்படுத்த தத்துவம் இயற்றினார் மார்க்ஸ். அதனை நடைமுறைப்படுத்தி உலகின் முதல் நிகரமை அரசை அமைத்த புரட்சியாளர் மாமேதை லெனின் ஆவார். அவருக்கு பின் வந்த ஸ்டாலின் உள்ளிட்ட பிற தலைவர்கள் அப்பணியை தொடர்ந்து வந்தும் கூட சோவியத் யூனியன் எனப்பட்ட பொதுவுடைமைப் பூங்காவை அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ சக்திகள் திட்டமிட்டு தகர்த்தன. இருந்தாலும் கியூபா, சீனா, கொரியா, வெனின்சுவேலா, உள்ளிட்ட பல நாடுகள் புரட்சியின் மூலம் கம்யுனிஸ அரசை நிறுவியுள்ளதை கவனிக்கவும். 'மனிதனுக்கு மனிதன் சமம்' என்னும் நிகரமைக் கொள்கையையும் 'அனைத்து பொருட்களும் மக்களுக்கே' என்கிற கம்யூனிஸ தத்துவத்தையம் நாம் ஏற்கிறோம். அதற்காக போராடிய மார்க்ஸ், ஏங்கெல்ஸ், சேகுவோரா, மாவோ, லெனின் உள்ளிட்ட தலைவர்களின் வழிகாட்டுதல்களின் படியும் மண்ணுக்கேற்ற புதிய மார்க்சிய தத்துவத்தை வரையறுப்பதின் மூலமும் புதிய நிகரமை சமூகத்தின் எழுச்சியை உருவாக்க முயல வேண்டும
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:11 PM

0 Comments:

Post a Comment

<< Home