சத்தியம் மக்கள் சேவை மையம்

Monday, March 5, 2007

செயல்பாடுகள்

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பேபி சாராஸ் ஹோம் என்கிற குழந்தைகள் மனநல காப்பகத்தில் அங்கிருக்கும் சிறார்களுக்கு முக்கிய தினங்களன்று உணவளித்து வருகிறோம்.

கடந்த நவம்பர் மாதம் அங்கிருக்கும் சிறார்களுக்கு உடை, அலமாரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்ட்டன. மையத்தின் மகளிர் பிரிவு தலைவி சசிகலா ஆறுமுகம் அவர்கள் இவ்வுதவியை வழங்கினார்.

கோடைவிடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச ஒருநாள் ஓவியப் பயிற்சியும் ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஓம் சக்தி சேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

நமது மையத்தின் இணையதளம் ஓம்சக்தி சேகர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் அருணபாரதி இயற்றிய மையத்தின் கொள்கை விளக்க புத்தகமும் வெளியிடப் பட்டது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலின் போது புதுச்சேரி தேர்தல் துறையினரின் அனுமதியுடன் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. அதன் பலனாய் வரலாறு காணாத வகையில் சுமார் 86 சதவீத வாக்குள் புதுச்சேரியில் பதிவாயின.

இதய நோயினால் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புதுச்சேரி-சித்தன் குளத்தை சேர்ந்த இளைஞர் அன்பு அவர்களுக்கு நம் மையத்தின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டன. சென்னையில் இருந்த நமது மையத்தின் தலைவர் க.அருணபாரதி அவர்கள் பல தொண்டு நிறுவனங்களுக்கு அன்புவின் தயாருடன் சென்று உதவிகோரினார். நமது சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் ரூ.2500 உதவித் தொகையாக அளிக்கப்பட்டது.

ஈழத்தில் பட்டினியில் வாடும் நம் தமிழ் மக்களுக்காக உணவு மற்றும் மருந்து பொருட்கள் திரட்டும்படி மாவீரர் பழ.நெடுமாறன் அவர்கள் விடுத்த வேண்டுகோளின் படி சத்தியம் மக்கள் சேவை மையம் பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது. ரூ.2750, 22 கிலோ அரிசி, 3 லிட்டர் எண்ணெய், 600 மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கபட்டன. 4-3-2007 அன்று மாலை பெரியார் திடலில் நடந்த பொதுவுடைமை புரட்சியாளர் சிங்காலவேலர் பிறந்தநாள் விழாவில் அவை திரு.பழ.நெடுமாறன் அய்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிறுவனர் சத்தியமூர்த்தி, தலைவர் அருணபாரதி, பொருளாளர் சந்தோஷ், ராமு, சங்கர் மற்றும் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:24 PM

0 Comments:

Post a Comment

<< Home