சத்தியம் மக்கள் சேவை மையம்

Monday, March 5, 2007

தொடங்கப்பட்டதன் வரலாறு

புதுச்சேரியின் வளரும் இளைஞர்களாகிய நாங்கள் வளர்ந்து வரும் பிற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கவும்இ இச் சமூகத்திற்கு ஏதேனும் நல்ல விடயங்கள் செய்வோமே என்ற ஆவலுடனும் கட்டமைக்கப்பட்டது தான் சத்தியம் மக்கள் சேவை மையம்.

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி புதுச்சேரி அரசின் மாநில பதிவுத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு இம்மையம் தொடங்கப்பட்டது. அதன் நிறுவனர் தோழர் மூ.சத்தியமூர்த்தி. ஸ்ரீ வேதபுரீஸ்வரர் வழிபாட்டு நற்பணி மன்றம் என்கிற ஆன்மீக நற்பணி மன்றத்தில் இணைந்து பல ஆன்மீக சேவைகள் செய்து வந்தவர். புதுவை பூரான்கள் இயக்கத்தின் காசுக்கடைக் கிளையிலும் இருந்தவர்.

அதன் தலைவராய் க.அருணபாரதி பொறுப்பேற்றார். மேல்நிலைப்படிப்பின் போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பல போராட்டங்களில் பங்கேற்றவர். புதுவை பூரான்கள் இயக்கத்தின் கலவைக் கல்லூரி கிளையின் தலைவராய் பணியாற்றியவர். பின் காசுக்கடைக் கிளைத் தலைவராகி பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அதன் செயலாளராக சீனு என்கிற சீனுவாசன் அவர்களும் பொறுப்பேற்றார். அதன் மற்ற நிர்வாகிகளாய் க.ஆனந்த், சந்தோஷ், சண்முகம், ஷங்கர் ஆகியோரும் பொறுப்பேற்றனர். அதன் அவைத்தலைவராக திரு.தே.சரவணன் அவர்கள் நியமிக்கபட்;டார். திரு தே.சரவணன் அவர்கள் சாரம் பகுதியில் பல ஆன்மிக மற்றும் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

ஆரம்பிக்கப்பட்டது முதல் பல பொது நல காரியங்களில் ஈடுபட்ட நமது சத்தியம் மக்கள் சேவை மையம், வெறும் பொது நலகாரரியங்களில் மட்டும் ஈடுபடாமல் வரும் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கொள்கை வழிமுறைகளைக் கடைபிடித்து மக்களுக்கான அரசியல் போராட்டங்களில் ஈடுபடவும் மக்களுக்கான இயக்கமாக ஒர் போராட்ட அரசியல் களத்தைக் காணவும் முடிவெடுத்துள்ளது. இது ஓட்டு, தேர்தல், அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கான போராட்டங்களை மட்டும் நடத்தும் போராட்ட அரசியல் வழிமுறையாகும். சத்தியம் மக்கள் சேவை மையம் மக்களின் பேராதரவுடன் மக்களுக்காக மக்களுடனே வலம் வரும் என நம்புகிறோம்.

-------------------------------------------------------------------------------------












செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 8:54 PM

0 Comments:

Post a Comment

<< Home