சத்தியம் மக்கள் சேவை மையம்

Sunday, March 4, 2007

புதுவையில் மரங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது

புதுவையில் மரங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது
மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தல்

புதுச்சேரி, மார்ச்.5-

புதுவையில் மரங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு தீர்ப்பு

ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக அந்த இடத்தில் 10மரக்கன்றுகளை நடவேண்டும் என சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம். வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில் இத்தீர்ப்பு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

மரங்கள் வெட்டப்படுவதுதான் போதிய மழை இல்லாமல் போனதற்கு காரணம். மேலும் ரசாயன தொழிற்சாலைகளாலும், நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாததாலும் நிலத்தடி நீர் மாசுபடுதல் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

மரங்களை வெட்டக்கூடாது

இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஐகோர்ட்டு வழங்கியுள்ள இத்தீர்ப்பு நகலை பெற்று அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பிவைக்கவேண்டும். புதுச்சேரியில் மரங்கள் நிறைய வெட்டப்படுவதால் இத்தீர்ப்பை செயல்படுத்துவது சுற்றுச்சூழலை ஓரளவாவது பாதுகாக்க உதவும்.

இந்த தீர்ப்பை பயன்படுத்திக்கொண்டு இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டக்கூடாது. தவிர்க்கவே முடியாத சூழலில்தான் மரங்கள் வெட்டப்படவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வோடு அரசு செயல்படவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சுகுமாரன் கூறியுள்ளார்.
 
Source:http://www.dailythanthi.com/article.asp?NewsID=320051&disdate=3/5/2007&advt=2
 
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 8:42 PM

0 Comments:

Post a Comment

<< Home