சத்தியம் மக்கள் சேவை மையம்

Friday, March 9, 2007

உலகமய எதிர்ப்பு

உலகமய எதிர்ப்பு

உலகத்தையே இன்று அச்சுறுத்தி வரும் கொள்கை 'உலகமயம்'. இந்த கொள்கையானது ஒரு நாட்டின் பொருளாதாராத்தை பிற நாட்டு நிறுவனங்களும் வேட்டையாட அனுமதிப்பதுடன் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவதிலும் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவதிலும் கவனம் செலுத்துகின்றது. எடுத்துக்காட்டு: இந்திய துணைக் கண்டத்தின் மொத்த குளிர்பான சந்தை சுமார் 6500 கோடி. அதில் நமது உள்@ர் காளிமார்க் கோடா, மாப்பிள்ளை வினாயகன் சோடா, கோலி சோடா உள்ளிட்ட பொருட்களும் அடங்கும். அதை குடிசைத் தொழிலாகவும் பலதரப்பட்ட மக்கள் செய்து வந்தனர். 1993 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட உலகமய பொருளாதாரக் கொள்கையால் பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வந்தன. ஏற்கனவே கொழுத்த லாபம் சம்பாதித்து வந்த அந்நிறுவனங்கள் இங்கிருந்த சிறு நிறுவனங்களை விளம்பர உத்திகள் மூலம் அழித்தன. பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்பொழுது இந்திய குளிர்பான சந்தை மொத்தமும் அவர்களிடம் தான். நம் மண்ணின் நீரை உறிஞ்சி அதில் நச்சு மருந்து இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் வேதிப்பொருட்கள் மேலும் பல கலந்து விஷமாக்கி அதை நம்மிடமே குடிக்க சொல்லுகின்றன அந்நிறுவனங்கள். அக்குளிர்பானங்கள் பிறந்த இடமான அமெரிக்காவின் பல இடங்களில் அது தடைசெய்யப்பட்ட பொருள் என்பது கவனத்துக்குரியது. இருந்தாலும் இந்தியா அதனை தடைசெய்யாமல் அமெரிக்காவுக்கு பயந்து அதை அப்படியே விட்டுவிட்டன. அதை போல எல்லாத் துறைகளிலும் இருந்த ஏழை இந்திய தமிழக நிறுவனங்களை அடித்து விரட்டிவிட்டு பன்னாட்டு பணக்கார நிறுவனங்கள் புகுந்து மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றோம். இந்நிலைமையை மீட்க மீண்டும் ஒரு சுதேசிப் போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது.  இனி நாம் வாங்கும் பொருட்கள் யாருடையது என்று பார்த்து வாங்க வேண்டும். எங்கோ இருக்கும் பணக்காரன் வாழ்வதை விட இங்கிருக்கும் ஏழைகள் வாழ்வது சிறந்ததல்லவா ?
சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்க முயலவேண்டும். அதனை மக்களிடம் பரப்பி பன்னாட்டு நிறுவனங்களை மண்ணை விட்டு விரட்டி மண்ணின் மைந்தர்களிடமே பொருளாதாரத்தை நிறுவ வேண்டும். அதற்கு தீர்வு பொருளாதாரத்திற்கான சிறந்த கொள்கையான பொதுவுடைமைக் கொள்கையே யாகும்.:
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 10:11 PM

0 Comments:

Post a Comment

<< Home