சத்தியம் மக்கள் சேவை மையம்

Sunday, December 31, 2006

புதுச்சேரி அரசுக்கு ஒர் கோரிக்கை

புதுச்சேரியில் தொடரும் குண்டு வெடிப்பு
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல் துறையினரின் அலட்சியப்போக்கு
நமது புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ள மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களை பீதியடைய வைத்துள்ளது. துணைக் குடியரசுத் தலைவர் விசயம் செய்துள்ள இந்த வேளையில் இப்படிப்பட்ட குண்டு வெடிப்பு நடப்பது காவல் துறையினர் மீது கலவரக்காரர்களுக்கு இருக்கும் பயமின்மையே காரணம்.இது போன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் நம் மக்கள் வெளியில் சுதந்திரமாக நடப்பது கேள்விக் குறியாகிவிடும். சட்டம் ஒழுங்கை காப்பதில் புதுச்சேரிக் காவல்துறையினர் அக்கறை காட்டுவதில்லை. கடந்த சில மாதத்தில் பல மோசடிபேர்வழிகள் சீட்டு மற்றும் ஏலக் கம்பெனிகள் நடத்தி பல கோடி ரூபாய்களோடு தலைமறைவாகியுள்ளனர். ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க புதிய பட்டியல் போட்டிருக்கிறோம் எனக்கூறிய காவல்துறையினர் தற்போது அந்த பட்டியலை எங்கு வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்நிலைமை நீடித்தால் புதுச்சேரி காவல்துறையினர் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய்விடும். புனிதமான காவல் பணியிருக்கும் காவல்துறையினா இதனை உணர்ந்து செயல்பட வேண்டுகிறோம். இது தொடர்பாக புதுச்சேரி முதல்வருக்கும் ஆளுனருக்கும் மனு செய்ய எமது மன்றம் 01-01-2007 அன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது, வரும் தமிழர் திருநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு உபசரித்து கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 11:13 PM 0 comments