சத்தியம் மக்கள் சேவை மையம்

Tuesday, June 12, 2007

உலக குழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம்

உலக குழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம்

 
இன்று ஜூன் 12 , உலகம் முழுவது உலக குழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகின்றது. இப்படி ஏராளமான தினங்களை அனுசரிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி எழுவது நியாயமே. இப்படிப்பட்ட தினங்கள் நம்மில் நிலவும் அவலங்களை நினைவுறுத்தி நமக்கு இந்த சமுதாயத்தில் செய்ய வேண்டிய கடன்கள் இருக்கின்றது என்பதனை நினைவுறுத்தவே.

 

சென்ற வருடம் 2006 கணக்கின் படி உலகில் சுமார் 218 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருக்கின்றார்கள்.இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண் குழந்தைகள்.

இந்த வருடத்தின் நோக்கம் குழந்தை தொழிலாளர்களை விவசாயத்துறையில் இருந்து மீட்க வேண்டும் என்பதே. குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருப்பது விவசாயத்துறையில் தான். இந்தியாவில் சுமார் 15 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர்.தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசமாக விவசாயத்தில் துணை புரிகின்றனர். ஆடு மாடுகளை மேய்த்தும்,பயிர்களை பராமரித்தும், இன்னபிற வேலைகளை கல்வி பெறும் நேரத்தில் செய்து வருகின்றனர். நம் வீட்டு குழந்தை எப்படி நன்றாக இருக்க ஆசைப்படுகின்றோமோ அதே போல அனைத்து குழந்தைகளும் இருக்கவேண்டும் என்று ஆசை கொள்வோம்

 

குழந்தை தொழிலாளர்களற்ற ஒரு சமூகத்திற்காக கனவு காண்போம். அதற்காக நம்மால் முடிந்த உதவிகள் புரிவோம்.இயன்ற அளவு மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வலுவான உலகளாவிய இயக்கம் துவங்கப்பட்டு  உலகில் குழந்தை தொழிலாளர்களே இல்லல என்ற நிலை வரவேண்டும்.

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:21 PM

0 Comments:

Post a Comment

<< Home